பிற விளையாட்டு

உலக இளையோர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் 7 தங்கம் வென்று சாதனை

உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

இதன் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஜித்திகா (48 கிலோ உடல் எடைப்பிரிவு), பேபிரோஜிசனா சானு (51 கிலோ), பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), சனமச்சா சானு (75 கிலோ), அல்பியா பதான் (81 கிலோ) ஆகிய 7 பேரும் தங்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தனர். இதன் மூலம் இந்திய பெண்கள் அணி முதலிடத்தை பிடித்தது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது