நகோயா,
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 15 ஆண் மற்றும் 15 பெண் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஒலிம்பிக் வீரர்களான ருத்ராங்க்ஷ் பாட்டீல் மற்றும் ஈஷா சிங் ஆகியோர் அணியின் முக்கிய வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் உலகக் கோப்பை தங்கப் பதக்க நாயகி சுருச்சி சிங் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சிப்ட் கவுர் சம்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. அதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் உலக சாம்பியன் சம்ராட் ராணாவும் இந்த முறை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகின்றன.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணி அபாரமாக செயல்பட்டு 7 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
10 மீட்டர் ஏர் ரைபிள்:
பார்த்த் ராகேஷ் மானே, ஹிமான்ஷு தில்லான், ருத்ராங்க்ஷ் பாட்டீல்
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ்:
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், நீரஜ் குமார், ருத்ராங்க்ஷ் பாட்டீல்
10 மீட்டர் ஏர் பிஸ்டல்:
கேதார்லிங் பி உச்சகான்வே, கௌரவ், கமல்ஜீத்
25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்:
அனிஷ் பன்வாலா
டிராப்:
கைனன் செனாய், அஹ்வர் ரிஸ்வி, ஷபத் பரத்வாஜ்
ஸ்கீட்:
அனந்த்ஜீத் சிங் நருகா, பவ்தேக் சிங் கில், மைராஜ் அகமது கான்
10 மீட்டர் ஏர் ரைபிள்:
இளவேனில் வாலறிவன், சோனம் உத்தம் மாஸ்கர், விதர்சா வினோத்
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ்:
ஆஷி சோக்சி, விதர்சா கே வினோத், திலோத்தமா சென்
10 மீட்டர் ஏர் பிஸ்டல்:
சுருச்சி சிங், ஈஷா சிங், மனு பாக்கர்
25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்:
ஈஷா சிங், மனு பாக்கர், ரஹி சர்னோபத்
டிராப்:
நீரு, மனிஷா கீர், ஆஷிமா அஹ்லாவத்
ஸ்கீட்:
பரினாஸ் தலிவால், ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான்
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி:
பார்த்த் ராகேஷ் மானே – இளவேனில் வாலறிவன்
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி:
கேதார்லிங் பி உச்சகான்வே – சுருச்சி சிங்