2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு பிறகு முதல்முறையாக இணைந்து ஆடிய மனிகா பத்ரா, சத்யன் ஜோடி இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளது. மிகச் சிறிய கால பயிற்சியில் இருவரும் கூட்டாக இந்த பட்டத்தை வென்று இருப்பது சிறப்பானதாகும். இது, ஒரு இணையாக எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பான யுக்தியுடன் செயல்பட்டோம் என்று சென்னையை சேர்ந்த சத்யன் தெரிவித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 10-12, 9-11, 10-12, 8-11 என்ற செட் கணக்கில் ஐரோப்பிய யூத் சாம்பியனான எலிசபெத் அப்ராமியானிடம் (ரஷியா) வீழ்ந்தார்.