பிற விளையாட்டு

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. #CWG2018

கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி வெள்ளிப்பதக்கத்தை வென்றனர்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டு திருவிழாவின் 11-வது நாளான இன்று இந்தியா பதக்க வேட்டையை தொடர்ந்து வருகிறது.

காமன்வெல்த் போட்டியில் இன்று ஸ்குவாஷ் இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி, நியூசிலாந்தின் ஜோயல் கிங், அமாண்டா லேண்டர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் நியூசிலாந்து ஜோடி 11-9, 11-8 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதன் மூலம் இந்தியா 26 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு