பிற விளையாட்டு

சர்வதேச செஸ்: குகேஷ் வெற்றி

3 தோல்வியும், 4 டிராவும் கண்டுள்ளார்.

விஜ்க் ஆன் ஜீ,

டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்த 10-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீரர் குகேஷ், துருக்கியின் யாஜிஸ் கான் எர்டோக்மசை சந்தித்தார்.

கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 50-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். நடப்பு தொடரில் குகேஷ் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். 3 தோல்வியும், 4 டிராவும் கண்டுள்ளார்.

10-வது சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்) 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜவோகிர் சிந்தாராவ், ஜோர்டான் வான் பாரஸ்ட், மத்யாஸ் புரூபாம் தலா 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர்.