பிற விளையாட்டு

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: வேலவன் செந்தில்குமார், அனாஹத் “சாம்பியன்”

பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் அனாஹத் சிங், ஜோஸ்னா சின்னப்பாவை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தினத்தந்தி

சென்னை,

எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் 4-வது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 11-7, 11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஆடம் ஹவாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

பெண்கள் ஒற்றையர் இறுதிசுற்றில் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் டெல்லியை சேர்ந்த 17 வயது வீராங்கனையான அனாஹத் சிங் 11-8, 11-13, 11-13, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் தமிழகத்தின் 39 வயது ஜோஸ்னா சின்னப்பாவை போராடி சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பரிசுக்கோப்பையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (நிர்வாகம்) வி.மணிகண்டன் வழங்கினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்