பிற விளையாட்டு

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை: மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் உலகளாவிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 2 இடம் முன்னேறி 33-வது இடத்தில் உள்ளார்.

27 வயது வீராங்கனையான பத்ரா, தோஹாவில் கடந்த வாரம் நடந்த உலக டேபிள் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியதில் அவருக்கு 140 புள்ளிகள் கிடைத்தன.

தொடக்க போட்டியில் உலக தரவரிசையில் 17-வது இடம் வகிக்கும் சீன தைபே வீராங்கனையான சென் சூ-யூ என்பவரை வீழ்த்தினார். தொடர்ந்து, அடுத்தடுத்த 2 போட்டிகளில் கொரிய வீராங்கனைகளான ஜூ சியோன்ஹூய் மற்றும் சோய் ஹியோஜூ ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

கடந்த நவம்பரில் நடந்த ஆசிய கோப்பையில் பத்ரா வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார். இதேபோன்று, ஆடவர் பிரிவில் சரத் கமல் 2 இடங்கள் முன்னேறி 46-வது இடம் பிடித்து உள்ளார். சத்யன் ஓர் இடம் பின்தங்கி 40-வது இடத்தில் உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு