பிற விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.

தினத்தந்தி


* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொச்சியில் அரங்கேறிய கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) இடையிலான ஆட்டம் 1-1 என்றகோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கேரள அணியில் ஒபிச்சேவும் (43-வது நிமிடம்), கவுகாத்தி அணியில் அசாமோ கயானும் (50-வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தனர். மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 49-வது லீக்கில் மும்பை சிட்டி-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

* ஈஸ்ட் லண்டனில் நேற்று நடந்த தென்ஆப்பிரிக்க ஜூனியர் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜூனியர் அணி (19 வயதுக்குட்பட்டோர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 29.5 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்ட நிலையில், இந்த இலக்கை இந்தியா 16.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால் (4 விக்கெட் மற்றும் 89 ரன்) ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு