பிற விளையாட்டு

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்தியாவின் யஷாஸ்வினி தேஸ்வால் தங்கம் வென்று அசத்தல்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற யஷாஸ்வினி தேஸ்வால் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை ரைபிள் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்று திவ்யான்ஷ் சிங் பன்வார் என்பவர் வெண்கல பதக்கம் வென்று பதக்க கணக்கை துவக்கினார்.

இன்றைய ஆட்டத்தில் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் யஷாஸ்வினி தேஸ்வால் தங்க பதக்கம் வென்றுள்ளார். அவர் மொத்தம் 238.8 புள்ளிகளை பெற்று இந்த பிரிவில் முன்னிலை பெற்றார்.

இதேபோன்று, அவருக்கு அடுத்த இடத்தில் மற்றொரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேக்கர் 236.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு