மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (image courtesy: Max Verstappen twitter via ANI) 
பிற விளையாட்டு

ஜப்பான் பார்முலா 1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் முதலிடம்

4 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 77 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

தினத்தந்தி

சுசூகா,

பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள சுசூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 307.471 கிலோ மீட்டர் தூரத்தை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 54 நிமிடம் 23.566 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 26 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 3-வது வெற்றி இதுவாகும்.

அவரை விட 12.535 வினாடி மட்டுமே பின்தங்கிய மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரெஸ் 2-வதாக வந்து 18 புள்ளியும், கார்லல் செயின்ஸ் (ஸ்பெயின்) 3-வது இடம் பிடித்து 15 புள்ளியும் பெற்றனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

4 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 77 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் செர்ஜியோ பெரெஸ் (64 புள்ளிகள்) உள்ளார். இதன் 5-வது சுற்று போட்டி சீனாவில் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து