Image Courtesy: AFP 
பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனைகள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர்.

இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீன தைபேயின் தாய் சு யிங் மோதினார். இதில் அஷ்மிதா 16-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை அகார்ஷி காஷ்யப் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் கான் யுன்னிடம் தோல்வி கண்டார்.

மற்றொரு இந்திய வீராங்கனை மால்விகா பன்சோட் 21-23, 19-21 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை பொலினா புரோவாவிடம் தோல்வி அடைந்தார். மூன்று இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு