கோப்புப்படம்  
பிற விளையாட்டு

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி - சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார் கார்ல்சன்

ஆன்லைன் மூலம் 2 சுற்றுகளாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2க்கு பூஜ்யம் என்ற புள்ளிக் கணக்கில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

நியூயார்க்,

ஜூலியஸ் கோப்பை சர்வதேச செஸ் தொடரில் நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார். இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய இளம் வீரர் அர்ஜுன் எரிகேசி உடன் கார்ல்சன் மோதினார்.

ஆன்லைன் மூலம் 2 சுற்றுகளாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2க்கு பூஜ்யம் என்ற புள்ளிக் கணக்கில் கார்ல்சன் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த அர்ஜுன் எரிகேசி 2ம் இடத்தை பிடித்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் 20 லட்சம் ரூபாயும், 2ம் இடம் பிடித்த எரிகேசிக்கு 12 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு