கோப்புப் படம் ANI 
பிற விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வி..!

இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் பி.வி. சிந்து, தென்கொரிய வீராங்கனை அன் சியோங் உடன் மோதினார்.

சன்சியான்,

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தென்கொரிய வீராங்கனை அன் சியோங் உடன் மோதினார்.

48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பி.வி. சிந்து 14-21, 17-21 என்ற செட் கணக்கில் அன் சியோங்கிடம் தோல்வியைத் தழுவினார். அன் சியோங் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.