பிற விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்; பிரணாய் அதிர்ச்சி தோல்வி

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.

தினத்தந்தி

சன்சியான்,

தென்கொரியாவின் சன்சியான் நகரில் பால்ம ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய கொரிய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளான லக்ஷயா சென், எச்.எஸ். பிரணாய், கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி. சிந்து உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

இதில் ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் லக்ஷயா சென் வெற்றி பெற்றார். மற்றொரு ஆடவர் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் மற்றும் மலேசியாவின் ஜூன் வெய் சீம் விளையாடினர்.

உலக தரவரிசையில் 23வது இடத்தில் உள்ள பிரணாய் மற்றும் 71வது இடத்தில் உள்ள வெய் சீம் இருவரும் தொடக்க போட்டியில் திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஒரு கட்டத்தில் இருவரும் 11-11 என்ற புள்ளி கணக்கில் இருந்தனர்.

எனினும், தொடக்க செட்டை 21-17 என்ற புள்ளி கணக்கில் மலேசிய வீரர் கைப்பற்றினார். 2வது செட்டை 7-21 என்ற புள்ளி கணக்கில் மலேசிய வீரர் எளிதில் கைப்பற்றி பிரணாயை வீழ்த்தினார். போட்டி 41 நிமிடங்களில் முடிவுற்றது. இதனால், 17-21, 7-21 என்ற புள்ளி கணக்கில் பிரணாய் தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது