கேலா லம்பூர்,
இந்தியாவின் வளர்ந்து வரும் பேட்மிண்டன் வீரர் லக்சயா சென். 20 வயதே ஆன இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரை இறுதி போட்டியில் உலக சாம்பியன் விக்டரை 21-13, 12-21, 22-20 என்ற செட்களில் வென்றார்.
இறுதி போட்டியில் தாய்லாந்து வீரரிடம் தோல்வி அடைந்து இருந்தாலும் இந்த தொடரில் முன்னணி வீரர்களை எதிர்த்து வெற்றி பெற்று சர்வதேச அளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆண்களுக்கான சர்வதேச ஒற்றையர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் லக்சயா சென் 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அது மட்டுமின்றி இந்த பட்டியலில் இந்தியாவின் சார்பாக லக்சயா சென் முன்னணி வகிக்கிறார். மற்ற இந்திய வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சாய் பிரனீத் 19-வது இடத்தில் உள்ளார்.