image courtesy: PTI  
பிற விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேறி அசத்தியுள்ளார்.

தினத்தந்தி

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யு உடன் பலப்பரீட்சை நடத்தினார். இருவரும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

இதில் முதல் செட்டை சிந்து கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை ஹான் கைப்பற்றினார். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அந்த செட்டை பி.வி.சிந்து கைப்பற்றி வெற்றி பெற்றார். முடிவில் சிந்து 21-13, 14-21 மற்றும் 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இவர் அரையிறுதி சுற்றில் தாய்லாந்து வீராங்கனையான ஓங்பாம்ருங்பன் உடன் மோத உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு