கோப்புப்படம்  
பிற விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் வெற்றி

முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் அன்டோன்செனுடன் மோதினார்.

தினத்தந்தி

கோலாலம்பூர்,

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் அன்டோன்செனுடன் மோதினார். இந்த போட்டியில் பிரனாய் 14-21, 11-21 என்ற நேர் செட்டில் ஆன்டர்ஸ் அன்டோன்சென்னிடம் தோல்வியைத் தழுவினார்.

மற்றொரு ஆட்டத்தில் சீன வீரர் வெங் ஹாங் யாங்குடன் மோதிய இந்திய வீரர் லக்ஷயா சென் 15-21, 16-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

இரட்டையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் முகமத் ஷோஹிபுல் பிக்ரி - பகாஸ் மலானா ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-19 என்ற செட் கணக்கில் முகமத் ஷோஹிபுல் பிக்ரி - பகாஸ் மலானா ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு