புதுடெல்லி,
இந்திய பேட்மிண்டன் அணியின் இரட்டையர் பிரிவினருக்கான பயிற்சியாளராக மத்தியாஸ் போவை (டென்மார்க்)
மீண்டும் நியமிக்க ஒலிம்பிக் பதக்கமேடை இலக்கு திட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவர் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி வரை இந்திய பேட்மிண்டன் அணியினருக்கான பயிற்சியை கவனிப்பார். இதற்காக மாதந்தோறும் ரூ.7 லட்சம் ஊதியமாக பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.