பிற விளையாட்டு

மீராபாய் சானு தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார் - இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர்

தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் மீராபாய் தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர் சக்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நொய்டாவில் வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான மீராபாய் சானு கலந்து கொள்ளமாட்டார் என்று இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர் சக்தேவ் யாதவ் நேற்று தெரிவித்தார்.

தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் மீராபாய் தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் வகையில் உடல் எடையை குறைத்து வரும் அவரது உடல் தகுதியை பேணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து