பிற விளையாட்டு

தேசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை கவுதமி ஜெயராமன் பெற்றுள்ளார்.

சென்னை,

65-வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில், தமிழக வீராங்கனை கவுதமி ஜெயராமன் மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

800 மீட்டரில் தங்கம்

மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கவுதமி ஜெயராமன் சிறப்பாக செயல்பட்டு, 2 நிமிடம் 04.17 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி

இந்த வெற்றியின் மூலம், ஜப்பானில் நடைபெற உள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் கவுதமி ஜெயராமன் பெற்றுள்ளார்.