பிற விளையாட்டு

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

கோவை,

கோவை பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான முதல் அரை இறுதிப்போட்டியில் கேரளா-பஞ்சாப் அணிகள் மோதின. முடிவில் கேரள அணி 74-70 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி, ராஜஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தமிழக அணி முன்னிலை வகித்தது. இறுதியில் தமிழக அணி 57-34 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தான் அணியை எளிதாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழக அணியை சேர்ந்த சத்யா 25 புள்ளிகள் குவித்தார்.

ஆண்களுக்கான முதல் அரை இறுதியில் கேரள அணி 65-62 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதுகின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்