பிற விளையாட்டு

55 அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்து போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்

நாடு முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் மோதுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் ஒரு அணியில் 3 பேர் இடம் பெறும் 3-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் கலந்து கொண்டு மோதுகின்றன.

இந்த போட்டியில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும். மேலும் இந்த போட்டியில் இரு பிரிவிலும் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் கோவாவில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்