பிற விளையாட்டு

தேசிய விளையாட்டுப் போட்டி - பேட்மிண்டனில் தமிழக ஆண்கள் இரட்டையர் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் தமிழகத்தின் ஹரிகரன்- ரூபன் குமார் ஜோடி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

தினத்தந்தி

ஆமதாபாத்,

36-வது ஆசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஆகர்ஷி காஷ்யப் (சத்தீஷ்கர்) 21-8, 22-20 என்ற நேர் செட்டில் மால்விகா பான்சோத்தையும் (மராட்டியம்), ஆண்கள் பிரிவில் முன்னணி வீரர் சாய் பிரனீத் (தெலுங்கானா) 21-11, 12-21, 21-16 என்ற செட் கணக்கில் மிதுன் மஞ்சுநாத்தையும் (கர்நாடகா) சாய்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.

இதே போல் பெண்கள் இரட்டையரில் தெலுங்கானாவின் சிக்கி ரெட்டி- காயத்ரி கோபிசந்த், கலப்பு இரட்டையரில் கர்நாடகாவின் சாய் பிரதீக்- அஸ்வினி ஆகிய ஜோடிகள் வாகை சூடின. ஆண்கள் இரட்டையரில் தமிழகத்தின் ஹரிகரன்- ரூபன் குமார் ஜோடி 19-21, 19-21 என்ற நேர் செட்டில் கேரளாவின் ரவிகிருஷ்ணா- சங்கர்பிரசாத் இணையிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை