பிற விளையாட்டு

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு தங்கம்

தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஐஸ்வர்யா தங்கபதக்கம் வென்றார்.

சென்னை,

17-வது தேசிய ஜூனியர் பெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஆர்.ஐஸ்வர்யா 12.64 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். கேரள வீராங்கனை எலிசபெத் கரோலின் ஜார்ஜ் 12.43 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், பஞ்சாப் வீராங்கனை அர்ஷித் கவுர் 11.74 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

தங்கம் வென்ற ஐஸ்வர்யா சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்