பிற விளையாட்டு

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை

தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை தபிதா புதிய சாதனை படைத்தார்.

குண்டூர்,

35-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 13.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் கேரள வீராங்கனை அபர்ணா ராய் 13.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. தபிதா நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்று இருந்தார். சாதனை படைத்த தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை