பிற விளையாட்டு

தேசிய ஓபன் தடகளம்: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்

சென்னையில் நடந்து வரும் தேசிய ஓபன் தடகள போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 950 வீரர்வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியின் 2வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனைகள் அர்ச்சனா (11.78 வினாடி) தங்கப்பதக்கமும், சந்திரலேகா (11.92 வினாடி) வெள்ளிப்பதக்கமும், கர்நாடக வீராங்கனை பிரஜ்னா பிரகாஷ் (11.92 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் ரெயில்வே வீராங்கனை பூர்ணிமா ஹேம்ப்ராம் (13.89 வினாடி) தங்கப்பதக்கமும், ஜார்கண்ட் வீராங்கனை அனுருபா குமாரி வெள்ளிப்பதக்கமும், ரெயில்வே வீராங்கனை சோமியா வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.

400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மேற்கு வங்காள வீராங்கனை சோனியா பாய்சா (53.98 வினாடி) தங்கப்பதக்கத்தையும், கர்நாடக வீராங்கனை விஜயகுமாரி வெள்ளிப்பதக்கத்தையும், ஓ.என்.ஜி.சி. வீராங்கனை ஜானா முர்மு வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கினார்கள். 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மராட்டிய வீராங்கனை அர்ச்சனா (4 நிமிடம் 18.64 வினாடி) தங்கப்பதக்கமும், ரெயில்வே வீராங்கனைகள் மோனிகா சவுத்ரி வெள்ளிப்பதக்கமும், பிரமிளா யாதவ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். குண்டு எறிதலில் ரெயில்வே வீராங்கனை நவ்ஜீத் கவுர் (15.23 மீட்டர்) தங்கப்பதக்கமும், ஓ.என்.ஜி.சி. வீராங்கனை காச்னார் சவுத்ரி வெள்ளிப்பதக்கமும், அரியானா வீராங்கனை ராக்ஹி சங்வான் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் சதாத் (10.57 வினாடி) தங்கப்பதக்கமும், தமிழக வீரர் இலக்கிய தாசன் (10.57 வினாடி) வெள்ளிப்பதக்கமும், சர்வீசஸ் வீரர் வித்யாசாகர் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள். 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் ஓ.என்.ஜி.சி. வீரர் சித்தாந்த் திங்கலயா (14.06 வினாடி) தங்கப்பதக்கமும், சர்வீசஸ் வீரர் அகில் ஜான்சன் வெள்ளிப்பதக்கமும், ரெயில்வே வீரர் சுரேஷ் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் ஜிது பாபி (47.08 வினாடி) தங்கப்பதக்கமும், ஓ.என்.ஜி.சி. வீரர் மோகன்குமார் வெள்ளிப்பதக்கமும், அரியானா வீரர் ரவிந்தர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரெயில்வே வீரர் அஜய் சரோஜ் (3 நிமிடம் 41.93 வினாடி) தங்கப்பதக்கமும், சர்வீசஸ் வீரர் அப்சல் வெள்ளிப்பதக்கமும், அரியானா வீரர் பிர்சிங் வெண்கலப்பதக்கமும் வென்றனர். நீளம் தாண்டுதலில் ரெயில்வே வீரர் ஷாம்ஷீர் (7.74 மீட்டர்) தங்கப்பதக்கமும், அரியானா வீரர் சஹில் மகாபாலி வெள்ளிப்பதக்கமும், சர்வீசஸ் வீரர் சிலம்பரசன் வெண்கலப்பதக்கமும் தனதாக்கினார்கள். ஈட்டி எறிதலில் சர்வீசஸ் வீரர்கள் தேவிந்தர் சிங் காங் (75.12 மீட்டர்) தங்கப்பதக்கமும், அபிஷேக் சிங் வெள்ளிப்பதக்கமும், பஞ்சாப் வீரர் சுனில் பிஸ்னோய் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...