பிற விளையாட்டு

தேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம்

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் 12 முறை சாம்பியனான சவுரவ் கோஷல் (தமிழகம்) 11-9, 11-1, 11-8 என்ற நேர் செட்டில் சக மாநில வீரரான அபய்சிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரைஇறுதியில் அபிஷேக் பிரதன் (மராட்டியம்) 11-6, 12-10, 10-12, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் போராடி ஹரிந்தர் பால் சிங் சந்துவை (தமிழகம்) தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜோஸ்னா சின்னப்பா (தமிழகம்) 11-9, 11-7, 11-4 என்ற நேர் செட்டில் சன்யா வாட்சை (டெல்லி) சாய்த்து இறுதி சுற்றை எட்டினார். மற்றொரு அரைஇறுதியில் தமிழக வீராங்கனை சுனைனா குருவில்லா 6-11, 11-3, 8-11, 11-8, 10-12 என்ற செட் கணக்கில் போராடி தன்வி கன்னாவிடம் (டெல்லி) தோல்வி அடைந்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை