பிற விளையாட்டு

தேசிய இளையோர் தடகளம்: தமிழக வீரர் கோகுல் தங்கம் வென்றார்

தேசிய இளையோர் தடகள போட்டியில் தமிழக வீரர் கோகுல் தங்கம் வென்றார்.

தினத்தந்தி

சென்னை,

15-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வடோதராவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப் போட்டியில் தமிழக வீரர் கே.கோகுல் 15.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தபிதா 14.10 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 14.08 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த கேரளா வீராங்கனை அபர்ணா ராய் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பதக்கம் வென்றதன் மூலம் கோகுல், தபிதா ஆகியோர் உலக இளையோர் தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்கள் இருவரும் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு