* கடந்த ஆகஸ்டு மாதம் காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ஓவர்கள் பந்து வீசினார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான வில்லியம்சனின் பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உத்தரவின் பேரில் அவர் இங்கிலாந்தில் உள்ள ஐ.சி.சி.யின் அங்கீகாரம் பெற்ற மையத்தில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் அவரது பந்து வீச்சில் எந்தவித விதிமுறை மீறலும் இல்லை என்று தெரியவந்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இனி அவர் தொடர்ந்து பந்து வீசலாம்.
* மும்பையில் சமீபத்தில் நடந்த உலக இளையோர் செஸ் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சென்னை மேல்அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ரக்ஷிதா வெண்கலப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ரக்ஷிதாவின் உருவம் பொறித்த பேட்ஜ் அணிந்து வரவேற்பு அளித்தனர்.