ஸ்பெயின்
ஐரோப்பிய பிராந்திய ஓபன் நிகழ்வுகளில் ஒன்றான கிரான் கனாரியா படகோட்டம் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினில் இன்று நடைபெற்றது.இதில் லேசர் ரேடியல் படகோட்ட போட்டியில் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் தங்கம் வென்றுள்ளார்.
24 வயதான நேத்ரா குமணன் கிரான் கனாரியாவில் நடந்த 6 படகோட்ட நிகழ்வில் மூன்றில் முதலிடம் பிடித்து 10 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தை தட்டி சென்றார் .
குமணன் வெற்றி பெற்றதற்கு இந்திய விளையாட்டு ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் கூறியுள்ளதாவது :
ஸ்பெயினில் நடந்த கிரான் கனேரியா படகோட்ட சாம்பியன்ஷிப்பில் (ஐரோப்பிய பிராந்திய ஓபன் நிகழ்வு) லேசர் ரேடியல் பிரிவில் தங்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை நேத்ரா குமணனுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமணன் இந்த ஆண்டு தொடக்கத்தில் டோக்கியோவில் நடந்த தனது முதல் ஒலிம்பிக்கில் லேசர் ரேடியல் வகுப்பில் 44 போட்டியாளர்களில் 35வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.