பிற விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது: ஜனாதிபதி வழங்கினார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதற்கட்டமாக கடந்த 21 ஆம் தேதி வழங்கினார். இந்த நிலையில், இன்று 2 வது கட்டமாக 64 பேருக்கு ஜனாதிபதி பத்ம விருதுகளை வழங்கி வருகிறார்.

இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நீரஜ் சோப்ரா ஜனாதிபதியிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது