அம்மான்,
நேற்று நடந்த ஆண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார், கிர்கிஸ்தான் வீரர் ஒமுர்பெக் பெக்ஸிட் உலுவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆஷிஷ் குமார் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் ஆஷிஷ் குமார், இந்தோனேஷியாவின் மைக்கேல் ரோபெர்ட் முஸ்கிதாவை சந்திக்கிறார்.