கோப்புப்படம் 
பிற விளையாட்டு

‘பத்மபூஷன்’ விருது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்துக்கும் உத்வேகம் அளிக்கிறது: தேவேந்திர ஜஜாரியா

பத்மபூஷன் விருது பெற்ற தேவேந்திர ஜஜாரியா, இந்த விருது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்துக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாராஒலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளரான ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில்,

இந்த விருது பாரா விளையாட்டுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்துக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாகும். முதல்முறையாக பாராவிளையாட்டு வீரருக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் விளையாட்டில் மிகப்பெரிய வீரராக உருவெடுக்க வண்டும் என்பதே எனது தந்தையின் கனவு. இதற்காக அவர் நிறைய தியாகம் செய்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக இதை பார்க்க அவர் இல்லை. இந்த விருதை மறைந்த எனது தந்தக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து