பிற விளையாட்டு

அர்ஜுனா விருதுக்கு பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை

அர்ஜூனா விருதுக்கு தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயரை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து வருகின்றன.

அந்த வகையில், தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பெயரை அர்ஜூனா விருதுக்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சமீபத்தில் நடைபெற்ற ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தி கவனம் பெற்றார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்