பிராக்,
பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் 9 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 10 வீரர்கள் மோதி வருகிறார் கள். 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமி ழகத்தை சேர்ந்த குகேஷ், சக நாட்டவரும். நடப்பு சாம்பியனுமான அரவிந்த் சிதம்பரத்தை சந்தித்தார்.
கருப்புநிற காய்களுடன் ஆடிய அர விந்த் சிதம்பரம் ஒரு கட்டத்தில் டிரா செய்தாலே போதும் என்ற நிலையில் இருந்தார். ஆனால் 40-வது நகர்த்தலில் குகேஷ் செய்த தவறு ஆட் டம் அரவிந்துக்கு சாதகமாக மாறியது. அடுத்த 8-வது நகர்த்தலில் அவர் வெற்றியை வசப்படுத்தினார். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத குகேசுக்கு இது 3-வது தோல்வியாகும். அரவிந்த் சிதம்பரத்துக்கு 2-வது வெற்றியாகும். 6-வது ரவுண்டில் மற்ற 4 ஆட்டங்களும் டிராவில் முடிந்தது.