டோக்கியோ,
டோக்கியோ பாராஒலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் எஸ்.எல் 4 பிரிவில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அதேபோல் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதனிடையே நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி ஆகிய இருவரும் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்க போட்டியில் பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி ஜோடி ஜப்பானின் பூஹிஹாரா மற்றும் சுகினோ இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ஜப்பான் ஜோடி 23-21, 21-19 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றியது.