பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி

புரோ கபடி போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றன.

தினத்தந்தி

பஞ்ச்குலா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு பஞ்ச்குலாவில் நடந்த 118-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 59-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது.

பெங்களூரு நட்சத்திர வீரர் பவான் செராவத் 38 முறை ரைடுக்கு சென்று அதில் 39 புள்ளிகளை குவித்து வியப்பூட்டினார். ஒரு ஆட்டத்தில் அதிக புள்ளிகள் சேர்த்த வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இதற்கு முன்பு பாட்னா வீரர் பர்தீப் நார்வல் ஒரு ஆட்டத்தில் ரைடு மூலம் 34 புள்ளி எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை பவான் செராவத் தகர்த்தார்.

11-வது வெற்றியை ருசித்த பெங்களூரு அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றது. முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 30-26 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை தோற்கடித்து 11-வது வெற்றியுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை 5 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு உ.பி.யோத்தா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையே போட்டி நிலவுகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-புனேரி பால்டன் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்