பிற விளையாட்டு

புரோ கபடி: அரியானா அணி 6-வது வெற்றி

புரோ கபடி போட்டியில், அரியானா அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்தது.

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-அரியான ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை ஆல்-அவுட் செய்து அதிர்ச்சி அளித்தாலும், அரியானா அணி சரிவில் இருந்து மீண்டு வந்து முன்னிலை பெற்றது. அந்த முன்னிலையை கடைசி வரை தக்கவைத்துக்கொண்டது. முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36-33 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது. 10-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி 6-வது வெற்றியை பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது. 10-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா-புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உ.பி.யோத்தா அணிக்கு, கடைசி கட்டத்தில் புனேரி பால்டன் நெருக்கடி கொடுத்தது. ஆனால் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. முடிவில் உ.பி.யோத்தா அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை சாய்த்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 10-வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பால்டன் அணி 6-வது தோல்வியை சந்தித்தது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்