பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: இன்றைய ஆட்டத்தில் பெங்கால்-உ.பி.யோதா அணிகள் மோதல்

மற்றொரு ஆட்டத்தில் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினத்தந்தி

புனே,

12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 41-32 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 42-39 என்ற புள்ளிக் கணக்கில் மும்பையையும் வீழ்த்தின.

இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெய்ப்பூர் 37 புள்ளியுடனும், பெங்களூர் புல்ஸ் 36 புள்ளியுடனும், யு மும்பை, தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது.

குஜராத் ஜெய்ன்ட்ஸ் 31 புள்ளியுடனும், தபாங் டெல்லி 30 புள்ளியுடனும், பெங்கால், வாரியர்ஸ், அரியானா தலா 29 புள்ளியுடனும், உ.பி. யோதா 27 புள்ளியுடனும், தெலுங்கு டைட்டனஸ் 8 புள்ளியுடனும் உள்ளன. முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோதா (இரவு 7.30 மணி) டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் (8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்