பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ், உ.பி. யோத்தா அணிகள் வெற்றி..!

நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

தினத்தந்தி

பெங்களூரு,

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 38-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இதுவரை 19 ஆட்டங்களில் ஆடியுள்ள பாட்னா அணி 14 வெற்றி, ஒரு டை, 4 தோல்வி என்று 75 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன், ஏற்கனவே பிளே-ஆப் சுற்றையும் உறுதி செய்துவிட்டது. பாட்னா அணியில் அதிகபட்சமாக சச்சின் 14 புள்ளி எடுத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி. யோத்தா அணி 44-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 9-வது வெற்றியை பதிவு செய்தது. பர்தீப் நார்வல் 14 புள்ளிகள் திரட்டி உ.பி. அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 31 புள்ளிகள் எடுத்தது. இதையடுத்து குஜராத் ஜெயன்ட்ஸ்-புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவானது.

இன்றைய லீக் ஆட்டங்களில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி), புனேரி பால்டன்- தமிழ் தலைவாஸ் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை