பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தொடர் தோல்வியில் தமிழ் தலைவாஸ்..!

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களுருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 121-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 31-43 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனிடம் பணிந்தது. இது தமிழ் தலைவாஸ் தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வியாகும். மொத்தத்தில் 20 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 9 தோல்வி, 6 டை என்று 47 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.

மேலும் நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ் 36-34 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 44-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பாவையும் வீழ்த்தியது. இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- தமிழ் தலைவாஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்