Image Courtacy: TamilThalaivasTwitter 
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதல்

மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

சென்னை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன

புரோ கபடி லீக் தொடரில், 4-வது சுற்று போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் (இரவு 8 மணி) மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

சாகர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் (10 புள்ளி) 11-வது இடத்தில் உள்ளது. நீரஜ் குமார் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. 4 ஆண்டுக்கு பிறகு உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு