பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய யுபி யோத்தா

புரோ கபடி லீக்கில் யுபி யோத்தா அணி புனேரி பல்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

பெங்களூர்,

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் இரவு 7.30 மணியளவி மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யுபி யோத்தா அணி 42-31 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்டனை வீழ்த்தியது. இதன் மூலம் யுபி யோத்தா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் மற்றொரு எலிமினேட்டர் சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்