பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தி உ.பி.யோத்தாஸ் வெற்றி

புரோ கபடி லீக் கடந்த 28ம் தேதி தொடங்கியது

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 12-வது புரோ கபடி லீக் விசாகப்பட்டினத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது . முதற்கட்ட லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 11-ந் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29- அக்.10), டெல்லி (அக்.11-23) ஆகிய இடங்களிலும் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி உ.பி.யோத்தாஸ் அணி 34-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

புனேரி பால்டன் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையேயான மற்றொரு ஆட்டத்தில் 41-19 என்ற கணக்கில் புனேரி பால்டன் வெற்றி பெற்றது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது