பிற விளையாட்டு

புரோ கபடி: புனே அணி ‘திரில்’ வெற்றி

புரோ கபடியில், அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.

தினத்தந்தி

புனே,

6-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) புனேரி பால்டன் அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி திரில் வெற்றியை சுவைத்தது. முதல் பாதியில் 8-23 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த புனே அணி பிற்பாதியில் வியப்புக்குரிய வகையில் ஆடி பிரமாதப்படுத்தியது. புனே அணியில் அதிகபட்சமாக சந்தீப் நார்வல் 7 புள்ளிகள் சேர்த்தார். 17-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் 34-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் புனேரி பால்டன்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு