பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-புனே ஆட்டம் ‘டை’

புரோ கபடி போட்டியில், தமிழ் தலைவாஸ்-புனே ஆட்டம் ‘டை’ ஆனது.

புனே,

7-வது புரோ கபடி லீக் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் புனேயில் நேற்றிரவு நடந்த 95-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி 39-36 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பதிவு செய்தது.

தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் இடையிலான மற்றொரு பரபரப்பான ஆட்டம் 36-36 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. இதில் ஆட்டம் முடியும் தருவாயில் 33-36 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடத்தில் எதிரணியை ஆல்-அவுட் செய்து அதன் மூலம் 3 புள்ளிகளை பெற்றதால் தோல்வியில் இருந்து தப்பியது. தமிழ் தலைவாஸ் வீரர் அஜித் குமார் ரைடு மூலம் 18 புள்ளிகள் சேர்த்து அசத்தினார். 17-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் 3 வெற்றி, 11 தோல்வி, 3 டை என்று 30 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு