பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-பாட்னா ஆட்டம் ‘டை’

புரோ கபடியில், தமிழ் தலைவாஸ், பாட்னா அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமன் ஆனது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

புனே,

6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 90-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சுடன் மோதியது. திரிலிங்கான இந்த ஆட்டம் 35-35 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது. கடைசி நிமிடத்தில் பாட்னா கேப்டன் பர்தீப் நார்வல் ரைடில் ஒரு புள்ளி எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினர். ரைடில் கலக்கிய தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர் 16 புள்ளிகள் சேர்த்தார்.

இன்னொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 48-35 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து 6-வது வெற்றியை சுவைத்தது. இன்றைய ஆட்டத்தில் தபாங் டெல்லி-யு மும்பா (இரவு 8 மணி) அணிகள் சந்திக்கின்றன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு