பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
அடுத்ததாக நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
மூன்றாவதாக இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 9.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.