Image Courtesy: Twitter ProKabaddi  
பிற விளையாட்டு

தமிழ் தலைவாஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புனே அணி

கடந்த 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 டிரா என தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

தினத்தந்தி

புனே,

12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 36- 33 என்ற கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்- புனேரி பால்டன் அணிகள் மோதின.

கடந்த 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 டிரா என தமிழ் தலைவாஸ் அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இந்த நிலையில் புனே அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 34-35 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தது. புனே அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற ஆகாஷ் ஷிண்டே 10 புள்ளிகளை குவித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு புனே அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு