பிற விளையாட்டு

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார், பி வி சிந்து

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி வி சிந்து முன்னேறினார்.

ஜகார்த்தா,

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள இந்திய வீராங்கனையான பி வி சிந்து, தொடக்க சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.

போட்டியின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை கை ஓங்கியிருந்தது. ஆனாலும் சிறப்பாக ஆடிய பி வி சிந்து 2வது மற்றும் 3வது சுற்றுக்களை கைப்பற்றினார். ஆட்டத்தின் இறுதியில், பி வி சிந்து 14-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் அயா ஒஹோரியை வெற்றிகண்டு 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...